பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


  • இயற்பெயர் : கல்யாணசுந்தரம்
  • பெற்றோர் : அருணாச்சலம்-விசாலட்சி.
  • பிறந்த ஊர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செங்கப்படுத்தான்காடு 

  • பிறப்பு : 13.4.1930            மறைவு : 8.10.1959
  • சிறப்புப் பெயர் : மக்கள் கவிஞர்
  • 1981-ம் ஆண்டு தமிழக அரசு பாவேந்தர் விருது வழங்கியது.
  • 1993-ல் கவிஞருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டது
  • கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள் :
    விவசாயி, மாடுமேய்ப்பவர், வியாபாரி, உப்பளத் தொழிலாளி, தண்ணீர் வண்டிக்காரர், டிரைவர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர்.
  • பொதுவுடைமைக் கருத்துகளைத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர்
  • முதல் பாடல் “நல்லதைச் சொன்னா நாத்திகனா’’
  • பட்டுக்கோட்டையார் பாடல் எழுதிய முதல் படம் படித்தபெண்
  • கவிஞர் 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார்.
  • பாரதிதாசன் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார்.
  • ‘எனது வலதுகை’ என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர்
  • ‘அவர் கோட்டை நான் பேட்டை’ என வேடிக்கையாகச் சொன்னவர் உடுமலை நாராயணகவி

     
  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்