மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்


மனித உரிமைகள் என்றால் என்ன?
மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அமைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும். மனித உரிமைகளில் அடிமைத்தனம் மற்றும் சித்திரவதைகளிலிருந்து சுதந்திரம், கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணை, வாழ்வதற்கான உரிமை, வேலை மற்றும் கல்விபெறும் உரிமை ஆகியவை அடங்கும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம்

மனித உரிமைகள் பற்றிய சிந்தனனை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வலுவாக எழுச்சி பெற்றது. 


உலகின் பல பகுதிகளில் பல்வேறு காரணங்களால் மனித உரிமைகள் மறுக்கப்பட்டன மற்றும் நீக்கப்பட்டன . இது சில நாட்டின் அரசாங்கத்தால் மட்டுமே மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்பதை நிரூபித்தது. வாழ்க்கை, சுதந்திரம், உணவு, இருப்பிடம், தேசம் ஆகியவை நியாயமற்ற முறையில் மறுக்கப்பட மாட்டாது என்பதை மக்கள் உறுதிப்படுத்த விரும்பினர்.
1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்ட சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் மக்களின் இத்தகைய விருப்பங்கள் ஒரு முக்கியப் பங்கினை வகித்தன. இச்சூழ்நிலையில் 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் நிறுவப்பட்ட அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை இந்தப் பிரச்சனையில் கவனம் செலுத்தியது. அமைதி மற்றும் பாதுகாப்பு, மேம்பாடு, மனிதாபிமான உதவி மற்றும் சமூக, பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அனைத்துக் கொள்கைகளிலும் திட்டங்களிலும் முக்கிய கருப்பொருளாக இந்த மனித உரிமைகள் விளங்குகின்றன.

மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHR)
ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்று மனித உரிமைகளுக்கான சட்டத்தை உருவாக்கியதாகும். 


இந்த இலக்குகளை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கான ஓர் ஆணையத்தை நிறுவியது. எலினார் ரூஸ்வெல்டின் (முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்களின் டிரூஸ்வெல்டின் மனைவி) வலுவான தலைமையால் வழிநடத்தப்பட்ட ஆணையம் உலகின் கவனத்தை ஈர்த்தது. இறுதியாக உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா. பொதுச்சபையால் 1948இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். 

இந்த அறிவிப்பு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஐ.நா. பொதுச்சபையால் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. (பொதுச்சபை தீர்மானம் 217A). இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இது 1950ஆம் ஆண்டிலிருந்து வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் கொள்கைகள் பெரும்பாலான நாடுகளின் (185 நாடுகளுக்கும் மேல்) அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.


உலக மனித உரிமைகள் அறிவிப்பு 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதுவே உலகில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் ஆகும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்