ஓர், ஒரு, அது, அஃது பயன்பாடு

ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன.

உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.)    
ஓர் ஊர் ஓர் ஏரி
ஒரு நகரம் ஒரு கடல் 

இவை போலவே, உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
(எ.கா.)   
அஃது இங்கே உள்ளது
அது நன்றாக உள்ளது

கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுது.
1.    ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
2.    ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.
3.    அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
4.    அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.
5.    அது ஒரு இனிய பாடல்.கருத்துரையிடுக

1 கருத்துகள்