Featured post
நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
2020-ஆம் ஆண்டிற்கான நாட்டில் சிறந்த, 10 போலீஸ் ஸ்டேஷன்களுக்கான பட்டியலில் முதலிடத்தை, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் பிடித்துள்ளது. தமிழகத்தின் சேலம் மாவட்டம், சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன், இரண்டாவது இடத்துக்கு தேர்வாகியுள்ளது.
மத்திய அரசு கடந்த, 2016ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், நாட்டில் சிறப்பாக செயல்படும், 10 போலீஸ் ஸ்டேஷன்களை தேர்வு செய்து, விருது வழங்கி வருகிறது.
சொத்துக்கள் தொடர்பான குற்றங்களை கையாளுதல், பெண்களுக்கு எதிரான குற்றம், நலிவடைந்தோருக்கு எதிரான குற்றங்கள், அடையாளம் தெரியாத உடல்கள் போன்ற குற்றங்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்ற அடிப்படையில், தரவரிசை வழங்கப்பட்டது.
மொத்தம், 19 வகையான அளவுகோல் அடிப்படையில், போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் பிரிக்கப்பட்டன.மாநிலத்துக்கு தலா மூன்று, யூனியன் பிரதேசங்களுக்கு தலா ஒன்று, டில்லிக்கு இரண்டு என, போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டன. 19 அம்சங்களை அடிப்படையாக வைத்து, 10 சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டன.
அதன்படி, நாட்டிலேயே சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக, வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், தவுபால் நகரில் உள்ள, நாங்போக் செக்மாய் போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தை, தமிழகத்தின், சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனும்; மூன்றாவது இடத்தை, அருணாச்சல பிரதேச மாநிலம், சாங்லங் மாவட்டத்தில் உள்ள கர்சங் போலீஸ் ஸ்டேஷனும் பிடித்துள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக