சலவை சோடாவின் பயன்கள் யாவை?
- காகிதம், சோப்பு, துணி, வண்ணப்பூச்சுகள் தயாரிக்க.
- துணி துவைக்கவும் வீட்டு பயன்பாட்டிற்கு தூய்மையாக்கியாக.
- பண்பறி மற்றும் பருமனறி பகுப்பாய்வில் முக்கிய ஆய்வுக்கூட காரணியாக.
- கடின நீரை மென்னீராக மாற்ற.
சமையல் சோடாவின் பயன்கள் யாவை?
- சமையல் சோடா என்பது சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் (சோடியம் பை கார்பனேட்) ஆகும்.
- சமையல் சோடா ரொட்டி சோடா தயாரிக்க.
- ரொட்டி சோடா என்பது சோடியம் பை கார்பனேட்டும் டார்டாரிக் அமிலமும் கொண்ட கலவை.
- ரொட்டி சோடா உணவுப் பொருளினை மென்மைப்படுத்தவும் குளிர் பானங்களில் காற்றுட்டம் செய்யவும் பயன்படுகிறது.
- தீயணைக்கும் சாதனங்களில் பயன்படுகிறது.
- இது காரத்தன்மையுடையதாக இருப்பதால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையை குறைக்க உதவுகிறது.
- ஆய்வுக் கூடங்களில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
- துணி, தோல் பதனிடுதல், காகிதம் மற்றும் பீங்கான் சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் முக்கிய வேதிப்பொருளாக பயன்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக