தமிழர் இசைக்கருவிகள் | காற்றுக் கருவிகள்

இசைக்கருவிகளின் வகைகள்

இசைக்கருவிகள் தோல்கருவி, நரம்புக்கருவி. காற்றுக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகைப்படும்.

1. விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள் எனப்படும்.(எ.கா.) முழவு, முரசு

2.  நரம்பு அல்லது தந்திகளை உடையவை நரம்புக்கருவிகள் எனப்படும்.
(எ.கா.) யாழ், வீணை

3.  காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக்கருவிகள் எனப்படும்.
(எ.கா.) குழல், சங்கு

4. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை கஞ்சக்கருவிகள் எனப்படும்.
(எ.கா.) சாவரா, சேகண்டி

இவற்றுள் காற்றுக் கருவிகள் குறித்துக் காண்போம்.

காற்றுக் கருவிகள் :

காற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுபவை காற்றுக்கருவிகளாகும். குழல், சங்கு, கொம்பு ஆகியவை காற்றுக் கருவிகளாகும்.

குழல் :

குழல் என்றால் புல்லாங்குழல் ஆகும். காடுகளில் மூங்கில் மரங்களை வண்டுகள் துளை இட்டதால் காற்று வழியாக இசை பிறந்தன. இதனைக் கேட்டும் பார்த்தும் முன்னோர்கள் புல்லாங்குழலை வடிவமைத்தனர்.

மூங்கில், சந்தனம் செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் புல்லாங்குழல் செய்யப்படுகின்றன. கொன்றைக் குழல், முல்லைக் குழல், ஆம்பல் குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. திருவள்ளுவரும், ‘குழல் இனிது’ என்கின்றார்.

கொம்பு :

கொம்பு இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே, பின்னால் ‘கொம்பு என்னும் இசைக்கருவி தோன்றக் காரணமாயிற்று. பித்தளை மற்றும் வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்பட்டன. வேட்டையாடும்போது வேடர்கள் இதனை ஊதுவார்கள்.

கள்வர்களை விரட்டவும், விலங்குகளிடமிருந்து எச்சரிக்கை செய்யவும் இக்கொம்பினை ஊதுவார்கள். திருவிழாக் காலங்களில் – கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி ஆகிய கொம்புகள் இக்காலத் திருவிழாக்களில் இசைக்கப்படுகின்றது.

சங்கு :

சங்கு ஓர் இயற்கைக் கருவி. கடலிலிருந்து எடுக்கப்படும் வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை, “வலம்புரிச்சங்கு என்று கூறுவர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்கள் இதனைப் ‘பணிலம்’ என்கிறது. திருவிழாக்களிலும், சடங்குகளிலும் சங்கினை முழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.

கடித இலக்கியம் - காந்தியடிகள் கடிதம்

சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்

புதுக் கவிதை - ஈரோடு தமிழன்பன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்