10th Tamil - நிகழ்கலை | கூத்துப்பட்டறை ந. முத்துசாமி

10th Tamil - நிகழ்கலை பாடத்திலிருந்து 
TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான  
முக்கிய தேர்வுக்குறிப்புகள் 

கூத்துப்பட்டறை ந. முத்துசாமி

  • தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர். "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர். 
  • இவர் தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர். அதே வேளையில் நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர். அவர்தான் கூத்துப்பட்டறை ந. முத்துசாமி என்ற கலைஞாயிறு.
  • இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. 
  • இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.
  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்