பெரியார் ஈ.வெ.ரா.

பத்தாம் வகுப்பு புதிய சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து

பெரியார் ஈ.வெ.ராமசாமி (1879-1973) சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆவார். இவர் ஈரோட்டை சேர்ந்த செல்வந்தரும் வணிகருமான வெங்கடப்பர், சின்னத்தாயம்மாள் ஆகியரோரின் மகனாவார்.

ஈரோட்டின் நகரசபைத் தலைவர் பதவி (1918-1919) உட்பட பல பதவிகளையும் அவர் வகித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெரியார் பதவி வகித்தபோது ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமை குறித்த தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.

சாதி தர்மம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள வீதிகளிளும் நுழைவது மறுக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட நடைமுறையினை வைக்கம் (திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு சுதேசி அரசு, தற்போதைய கேரள மாநிலத்திலுள்ள ஒரு நகரம்) மக்கள் எதிர்த்தனர். எதிர்ப்பின் தொடக்கக் கட்டங்களில் மதுரையைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் பெரும்பங்கு வகித்தார். உள்ளூர் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் பெரியார் இந்த இயக்கத்திற்கு தலைமையேற்றதால் சிறையிலடைக்கப்பட்டார். மக்கள் அவரை 'வைக்கம் வீரர்' எனப் பாராட்டினர்.

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள்  

நீதிக்கட்சியின் திட்டங்களும் செயல்பாடுகளும்


விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம்  (தொடர்ச்சி)
கிருஷ்ணதேவராயர்

தலைக்கோட்டைப் போரும் விஜயநகர் பேரரசின் வீழ்ச்சியும்

விஜயநகர பேரரசின் இலக்கியம், கலை, கட்டடக்கலை

இந்தியாவின் வரலாறும் பண்பாடும் | விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம்  

7th History | வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்