சுயமரியாதை இயக்கம் (self-respect movement) சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும் அவர்களின் மனித சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925 ஆம் ஆண்டு பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்களால் இந்தியாவின், தமிழக மாநிலத்தில் (அப்போதைய சென்னை இராஜதானி) தொடங்கப்பட்டது. சுயமரியாதை இயக்கம் (Self Respect Movement) சடங்குகளும் சம்பிரதாயங்களும் இல்லாத சாதிகளற்ற பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடற்ற ஒரு சமூகத்தை இவ்வியக்கம் ஆதரித்தது.
பகுத்தறிவும் சுயமரியாதையும் அனைத்து மனிதர்களின் பிறப்புரிமை எனப் பிரகடனம் செய்த இவ்வியக்கம் சுயாட்சியைக் காட்டிலும் இவை முக்கியமானவை எனும் கருத்தை உயர்த்திப் பிடித்தது.
பெண்களின் தாழ்வான நிலைக்கு எழுத்தறிவின்மையே காரணம் என அறிவித்த அவ்வியக்கம் அனைவருக்கும் கட்டாயத் தொடக்கக் கல்வியை வழங்கும் பணிகளை மேற்கொண்டது.
சுயமரியாதை இயக்கம் பெண் விடுதலை கோருதல், மூடநம்பிக்கைகளை நீக்குதல் மற்றும் பகுத்தறிவை வலியுறுத்துதல் போன்ற கோரிக்கைகளை கோரியது. மேலும் இவ்வியக்கம் சீர்திருத்தத் திருமணம் அல்லது சுயமரியாதைத் திருமணங்களை ஆதரித்தது.
சுயமரியாதை இயக்கம் பிராமணர் அல்லாத இந்துக்களின் நலன்களுக்காக மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் நலனுக்காகவும் போராடியது.
இஸ்லாமின் மேன்மை மிகுந்த கோட்பாடுகளான சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை சுயமரியாதை இயக்கம் பாராட்டியது.

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள்
நீதிக்கட்சியின் திட்டங்களும் செயல்பாடுகளும்
விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் (தொடர்ச்சி)
கிருஷ்ணதேவராயர்
தலைக்கோட்டைப் போரும் விஜயநகர் பேரரசின் வீழ்ச்சியும்
விஜயநகர பேரரசின் இலக்கியம், கலை, கட்டடக்கலை
இந்தியாவின் வரலாறும் பண்பாடும் | விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம்
0 கருத்துகள்