TNPSC Group IV & VAO Exams | General Tamil Study Material
Noolaham | Noolagam | நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம் :
ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம்.
தரைத்தளத்தோடு எட்டு அடுக்குகளைக் கொண்டது. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர்.
ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் சீனாவில் உள்ளது.
நூலக விதிகளை உருவாக்கியவர் முனைவர் இரா. அரங்கநாதன். இவர் இந்திய நூலகவியலின் தந்தை (Father of Indian library science) என்று அழைக்கப்படுகிறார்.
சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன.
உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமாரா நூலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது, திருவனந்தபுரம் நடுவண் நூலகம்.
கொல்கத்தாவில் 1836ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப் பெரிய நூலகமாகும். இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது.
உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்.
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்படவேண்டும்! - அறிஞர் அண்ணா
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! - கதே
தமிழகத்தின் மிகப் பழைமையான நூலகங்கள்:
- சரசுவதி மகால் நூலகம், தஞ்சை. (1820)
- அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை.
- கன்னிமாரா நூலகம், சென்னன. (1869),
- சென்னைப் பல்கலைக்கழக நூலகம் (1907),
- அண்ணாமலை பல்கலைக்கழக நூலகம், சிதம்பரம் (1929),
- டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை (1947),
- மறைமலை அடிகளார் நூலகம், சென்னை (1958),
- மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம் (1966),
- உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம், சென்னை (1970),
- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் (1981)
19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி விவேகானந்தர்
அலிகார் இயக்கம் | சர் சையது அகமதுகான்
இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்
இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்
0 கருத்துகள்