தமிழ் வளர்த்த சான்றோர்கள்

புதுக்கவிதைக்கு     -    பாரதியார்

சமுதாயப் புரட்சிக்கு     -    பாரதிதாசன்
பொதுவுடைமைக்கு     -    திரு.வி.க
தனித்தமிழுக்கு     -    மறைமலையடிகள்
பேச்சுக்கலைக்கு     -    அறிஞர் அண்ணா
சிறுகதைக்கு     -    புதுமைப்பித்தன்

வீரமாமுனிவர் (1680 - 1747)
 • இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.
 • இவரின் இயற்பெயர் ‘கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி’
 • இவர் தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகம் வந்தார்.
 • ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார்.
 • தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைத் ‘தைரியநாதர்’ என மாற்றிக்கொண்டார்.
 • பின்னர் தம் பெயரைத் தனித்தமிழாக்கி ‘வீரமாமுனிவர்’ எனச் சூட்டிக்கொண்டார்.
 • தமிழ்மொழி பயின்றதோடு தெலுங்கு, வடமொழி முதலிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.
 • தமிழில் முதன்முதலாகச் ‘சதுரகராதி’ என்னும் அகரமுதலியை வெளியிட்டார்.
 • கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் ‘தேம்பாவணி’ என்னும் காப்பியத்தைப் படைத்தார்.
 • தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்.
 • ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கண நூலைப் படைத்தார். இந்நூல் குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
 • கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களை இயற்றினார்.
 • பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதினார்.
 • “தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது. தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டினார்.

குணங்குடி மஸ்தான் (1788-1835)
 • “மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்” என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்.
 • இவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிறு
 • இளம்வயதிலே  முற்றும்  துறந்தவராய் வாழ்ந்தவர்.
 • இவர்  தாயுமானவர் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் .
 • அவருடைய  பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல  இயற்றியுள்ளார்.
 • பராப்பரக்கண்ணி,  எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி,  நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில  கண்ணிகள்.
 • இவர்தம்  பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப்  பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை  அழைத்து செல்லும்.
 • இவர் குருநிலை,  தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை,  தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும்  வகையில் பாடல்கள் பல  இயற்றியுள்ளார்.
 • இவர் மீது  கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள்    நான்மணிமாலை ஒன்று  இயற்றியுள்ளார்.
 • அந்நூலில் "மடல் சூல்புவியில உளத்திருளைக் கருணை ஒளியினாற்  களைந்து, விடல்சூழ்பவரின் குணங்குடியான், மிக்கோன் எனற்கு ஓர்  தடையுளதோ? எனக் கேட்கிறார்.
 •  "தடை உண்டு என உரைப்பார்  தமிழுலகில் இல்லை "என்கிறார்.

ஆறுமுக நாவலர்(1822-1879)

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection