அனிச்சம் மலர்


முகர்ந்ததும் வாடிவிடும் என்று (இலக்கியத்தில்) கருதப்பட்ட மலர். கற்புடைய பெண்களை இம்மலரோடு ஒப்பிட்டுக் குறிஞ்சிப் பாடலில் பாடியுள்ளார் கபிலர்.

தன் கற்பை உயிரினும் பெரிதாய்ப் போற்றும் மங்கைகள் வேறொருவன் பார்வை தன் மேல் பட்டாலே தன்னுயிரை மாய்த்துக் கொள்வர். அதேபோல, இம்மலரும் முகர்ந்து பார்த்தாலே வாடும் தன்மைக் கொண்டதாகத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகவும் மென்மையான பூ அனிச்சம்பூ. கைகளால் தீண்டினாலோ அல்லது முகர்ந்து பார்த்தாலோ வாடிவிடும் அளவுக்கு மென்மையானது இந்த அனிச்சம்பூ. திருவள்ளுவர் தம் குறள்களில் பலவற்றில் அனிச்சம் பூவினை அழகாக கையாண்டுள்ளார்.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”

பொருள்: முகர்ந்தவுடனே வாடிவிடுவது அனிச்சம் பூ அதுபோல எமது முகத்தில் சிறுமாறுபாடும் நோக்கிய உடனே விருந்தினரின் உள்ளமும் வாடி விடுவிடும்.

“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவன்”

பொருள்: அனிச்ச மலரின் மென்மையைக் காட்டிலும் என் காதலி மென்மையானவள்.

“அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை”

பொருள்: காதலியின் நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக் கொண்டதுதான்.

“அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்”

பொருள்: அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.
காப்பியங்களில் அனிச்சம்
  •     ஆண்கள் தலையில் சூடிக்கொள்வர்.
  •     மாலையாகத் தொடுத்தும் அணிவர்.
  •     பட்டாடை மேல் அனிச்ச மாலை அணிவர்.
  •     கருவைத் தாங்கும் பெண்ணுக்கு அனிச்ச மலரும் சுமையாயிற்று.
  •     அல்லிப் பூவோடு சேர்த்து அனிச்ச மலரை அணிவதும் உண்டு.
  •     ஐ என்னும் வியப்புக்கு உரிய மலர்.
  •     குழையும் மலர்.
  •     பஞ்சி படர்ந்த மலர்.
  •     அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மிகவும் மென்மையானவை.
  •     வியப்புக்கு உரிய நொய்ய மலர்.
புதிய 6ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்
Jana New 9th Book TNPSC, TET, Police Exam Tamil Mock Test-1 Pdf download

கருத்துரையிடுக

0 கருத்துகள்