Featured post
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram
இந்திய விடுதலை இயக்கம்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள் (1885-1919)
இந்திய தேசிய காங்கிரஸ் - 1885
1885 இல் ஆங்கில அதிகாரி ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரின் ஆலோசனைப்படி இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
மும்பையில் நடந்த இதன் முதல் கூட்டத்திற்கு W.C. பானர்ஜி தலைமை வகித்தார்.
தாதாபாய் நௌரோஜி, சுரேந்திராத் பானர்ஜி, மதன் மோகன் மாளவியா, எம்.ஜி.ரானடே, கோபாலகிருஷ்ண கோகலே, பெரோஷாமேத்தா, ஜி.சுப்பிரமணிய ஐயர் போன்றோர் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நோக்கங்கள்:
- சட்டமன்றங்கள் விரிவுப்படுத்தப்பட்டு, அதிக பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
- கல்வியைப் பரப்ப வேண்டும்.
- பத்திரிகை சுதந்திரம் வேண்டும்.
- இந்திய நிர்வாகப்பணித் தேர்வுகளை (ICS) இந்தியாவில் நடத்தவேண்டும்.
- இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும்.
- வரியை எளிமையாக்க வேண்டும்; இறக்குமதி வரியை அதிகமாக்க வேண்டும்.
- உயர்பதவிகளில் இந்தியர்களை நியமிக்க வேண்டும்.
- லண்டனில் இருக்கும் இந்தியன் கவுன்சிலைக் கலைக்க வேண்டும்.
மிதவாதிகள்
- ஆரம்பத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மிதவாதிகளாக இருந்தனர்.
- சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, பெரோஷா மேத்தா, கோபாலகிருஷ்ண கோகலே, எம்.ஜி.ரானடே போன்றோர் மிதவாத தலைவர்கள்.
- தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலம் நிறைவேற்ற முயன்றனர்.
- மிதவாதிகளின் கோரிக்கை “அரசியல் பிச்சையாக” உள்ளது என இளைய கலைமுறையினர் வருணித்தனர்.
தீவிரவாதிகள்
- அரசின் கருணையை எதிர்பார்க்காமல் நாட்டு விடுதலைக்குத் தீவிரப்போக்கைக் கடைப்பிடித்ததால் தீவிரவாதிகள் எனப்பட்டனர்.
- பாலகங்காதர திலகர், லாலாலஜபதிராய், பிபின் சந்திரபால், அரவிந்தகோஷ் போன்றோர் தீவிரவாதத் தலைவர்கள்.
- திலகர் “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கினார்.
- மராட்டிய மொழியில் "கேசரி” என்ற இதழை நடத்தினார்.
- கணபதி, சிவாஜி பண்டிகை மூலம் தேசிய உணர்வை ஊட்டினார்.
- காங்கிரசின் நோக்கத்தையும் அதை அடையும் வழியையும் மாற்ற விரும்பினர்.
வங்கப்பிரிவினை - 1905
- 1905 இல் கர்சன் பிரபு நிர்வாக வசதிக்காக வங்காளத்தை இரு மாகாணமாகப் பிரிக்கப்படுவதாக அறிவித்தார்.
- இதனை இந்தியர்கள் இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்கான சூழ்ச்சி என்றே கருதினர்.
- தீவிர வன்முறையாலும் எதிர்ப்பாலும் 1911 இல் வங்காளம் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டது.
- வங்கப்பிரிவினை பொருளாதாரப் புறக்கணிப்பு என்ற சுதேசி இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது.
- சுதேசி என்பதற்கும் சொந்த நாடு என்று பொருள். சுதேசி இயக்கம் என்பது உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்க அயல்நாட்டுப் பொருளைப் புறக்கணிப்பது.
- பக்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய “வந்தே மாதரம்” என்ற தாய்நாட்டு முழக்கத்தை காங்கிரசார் எழுப்பினர்.
முஸ்லீம் லீக் தோற்றம் - 1906
- 1897-ல் ஆங்கிலேயர்க்கு எதிராகத் தோன்றிய முதல் சுதந்திரப் போரில் முஸ்லீம்கள் அதிகமாக ஈடுபட்டனர்.
- இந்திய தேசிய காங்கிரசில் பெரும்பாலும் இந்துக்கள் இருந்தனர். இது முஸ்லீம்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
- பிரித்தாளும் கொள்கை கொண்ட ஆங்கில அரசு, முஸ்லீம்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது.
- 1906-ல் டாக்காவைச் சேர்ந்த நவாப் சலிமுல்லாகான் என்பவர் தலைமையில் முஸ்லீம் லீக் கட்சி தொடங்கப்பட்டது.
- காங்கிரசிலிருந்து முஸ்லீம்களைப் பிரிப்பது, ஆங்கிலேய விசுவாசம், தனித்தொகுதி ஆகியன இதன் முக்கிய நோக்கம்.
- 1907 இல் சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
- காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தது; தீவிரவாதிகள் வெளியேறினர்.
- தீவிரவாதிகளின் தலைவர் பாலகங்காதர திலகர்; மிதவாதிகளின் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே.
மிண்டோ - மார்லி சீர்திருத்தங்கள் - 1909
- 1909-ல் முஸ்லீம்களைத் திருப்திபடுத்தி இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. முஸ்லீம்களுக்குத் தனித் தொகுதி வழங்கப்பட்டது. காங்கிரஸ் இதனை எதிர்த்தது.
தன்னாட்சி இயக்கம் - 1916
- 1916 - ல் பாலகங்காதர திலகர் தன்னாட்சி கழகத்தை மும்பையில் நிறுவினார்.
- அன்னிபெசன்ட் அம்மையார் இதன் கிளைக் கழகத்தைச் சென்னையில் தொடங்கினார்.
- மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் இருவரும் இதற்கு ஆதரவு தந்தனர்.
- அன்னிபெசன்ட் நடத்திய நியூ இந்தியா இதழை ஆங்கில அரசு தடை செய்தது.
- 1916- ல் காங்கிரசின் ஆண்டு மாநாடு லக்னோவில் நடந்தது.
- இதில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் ஒன்றுபட்டனர்.
- சூரத் மாநாட்டில் (1907) காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தது. தீவிரவாதிகள் வெளியேறியிருந்தனர்.
- சுயாட்சிபெற ஒத்துழைப்பது என காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
- இம்மாநாட்டில்தான் ஜவஹர்லால் நேரு முதன் முதலாகக் காந்தியைச் சந்தித்தார்.
ஆகஸ்ட் அறிக்கை - 1917
- 1917-ல் ஆகஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டது.
- இதன்படி இந்தியாவில் படிப்படியாகத் தன்னாட்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
- இதனால் தன்னாட்சி இயக்கம் படிப்படியாக முடிவுக்கு வந்தது.
மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் - 1919
- முதல் உலகப் போரில் இந்தியர்கள் தந்த முழு ஒத்துழைப்புக்குக் கைமாறாக இச்சீர்திருத்தங்கள் 1919 இல் கொண்டுவரப்பட்டன.
இதன்படி - மாகாண சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன.
- மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஆங்கிலோ- இந்தியர், சீக்கியர், கிறித்தவர்களுக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
- காங்கிரஸ் இச்சட்டத்தை எதிர்த்தது.
- இது ஆங்கிலேயரின் பெருந்தன்மை அற்ற செயல்; இதனை ஏற்பது இந்தியர்களுக்கு மதிப்புடையதாகாது என்றார் அன்னிபெசன்ட்.
- இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை அடக்க 1919 இல் ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட்டது.
- இதன்படி ஆங்கில அரசு யாரையும் உத்தரவு இன்றிக் கைது செய்யலாம்; விசாரணை இன்றிச் சிறையில் அடைக்கலாம்.
- காங்கிரஸ் காந்தியடிகள் தலைமையில் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தது.
- 1919, ஏப்ரல் 6 ஆம் நாள் நாடு முழுவதும் கடையடைப்பும், மறியலும் (Hartal) மேற்கொள்ளப்பட்டன.
ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919
- பஞ்சாப்பின் முக்கிய தலைவர்களான டாக்டர் சத்தியபால், டாக்டர் சாய்ப்புதீன் கிச்லு ஆகியோர் 13.04.1919 இல் கைது செய்யப்பட்டனர்.
- எதிர்ப்புத் தெரிவிக்க அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலாபாக் (பூங்கா) 10 ஆயிரம் மக்கள் அமைதியாகக் கூடினர்.
- பூங்கா சுற்றி மதிற்சுவரையும் ஒரு சிறிய வாயிலையும் கொண்டது. இராணுவத்தளபதி ஜெனரல் டையர் தன் படைகளுடன் நுழைவாயிலுக்கு வந்து முன் அறிவிப்பு இன்றித் துப்பாக்கிச்சூடு நடத்தினார். நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர்.
- இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரவீந்திரநாத் தாகூர் தனது 'நைட்வுட்' பட்டத்தைத் துறந்தார்.
- முதல் உலகப் போரில் ஜெர்மனியின் நட்பு நாடான துருக்கியும் தோல்வி அடைந்தது.
- துருக்கியை இங்கிலாந்தும் பிரான்சும் பங்கு போட்டுக் கொண்டன.
- உலக முஸ்லீம் மக்களின் தலைவரான காலிப்பை ஆங்கிலேயர்கள் அவமதித்தனர். எனவே ஆங்கில அரசுக்கு எதிராக இந்தியாவில் அலி சகோதரர்கள் (முகமது அலி, சவுகத் அலி ) கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.
- இதனால் காங்கிரசும் முஸ்லீம் லீக் கட்சியும் நெருங்கி வரும் என்று எண்ணிய காந்தி இவ் இயக்கத்தை ஆதரித்தார்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக