பிட்காயின் - Bitcoin


பிட்காயின் என்பது எலெக்ட்ரானிக் அல்லது டிஜிட்டல் பணம் (கரன்சி). அதாவது டிஜிட்டல் வடிவத்தில் இந்த நாணயம் இயங்கும். பணம் மற்றும் நாணயம் போல அச்சிடப்படுவது இல்லை. கணித சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய ஒரு மென்பொருள் மூலம் மக்களால், அதிகரிக்கும் தொழில் வளர்ச்சியால், உலகம் முழுக்க இயங்கும் கணினிகளால் பிட்காயின் தயாரிக்கப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு கட்டுப்பாட்டு அமைப்பும் இல்லை. அதாவது ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பிட்காயின் பணத்தை அனுப்பமுடியும். ஆனால் இதற்கென ஒரு கட்டுப்பாட்டு அமைப்போ அல்லது அரசின் கீழ் இயங்குவதோ கிடையாது. ஆனால் இந்த பிட்காயின் உருவாவதை கட்டுப்படுத்துவதற்கு கிரிப்டோகிராபி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பிட்காயின் பண பரிமாற்றத்தையும் மென்பொருளே சேமித்து வைத்துக் கொள்கிறது.

பிட்காயினின் சிறப்பம்சம் என்னவென்றால் உலகத்தில் எந்தவொரு மூலைக்கும் பிட்காயினை எந்த நேரத்திலும் அனுப்பமுடியும். மேலும் ஒரு தனிநபர் பல்வேறு காரணங்களுக்காக பல பரிமாற்ற முகவரியை வைத்துக் கொள்ள முடியும். ஒரு சில நிமிடங்களில் பிட்காயின் பணப் பரிமாற்றம் நடந்து விடுகிறது. எனவே உடனடியாக பயனாளர் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். சாதாரண பணத்தைப் போலவே பணத்தைப் பெற்றவர் திரும்ப கொடுத்தால் மட்டுமே அந்த பணம் உங்களது கணக்கில் வரவாகும். இல்லையெனில் அந்த பிட்காயின் பணத்தின் மதிப்பு உங்கள் கணக்கில் குறைந்து காணப்படும். ஒவ்வொரு பரிமாற்றத்தையும் சேமித்து வைத்துக் கொள்வதால் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. இந்த தகவல் தொகுப்பு பிளாக்செயின் என்று கூறப்படுகிறது.
சாதாரணமாக பிட்காயின் எக்சேஞ்ச் இடங்களில் நீங்கள் பிட்காயினைப் பெற்றுக் கொள்ளமுடியும். அதுமட்டுமல்லாமல் பிட்காயினை பயன்படுத்துவோர்களிடமிருந்தும் நீங்கள் பிட்காயினை வாங்கிக் கொள்ள முடியும். மேலும் விரைவில் பிட்காயினாக மாற்றிக் கொள்வதற்காக `பிட்காயின் எக்சேஞ்ச் டிரேட் பண்ட்என்ற ஒன்றை உருவாக்க இருக்கின்றனர். பிட்காயினை உருவாக்குபவராக வேண்டுமென்றால் நீங்கள் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் இரண்டிலும் முதலீடு செய்ய வேண்டும். ஹார்ட்வேரில் அதிக முதலீடுகளை செய்யும் பட்சத்தில் அதிக பிட்காயின்களை நீங்கள் பெற வாய்ப்பு அதிகம்.

பெங்களூரில் இயங்கிவரும் யுனோ காயின் என்ற நிறுவனம் பிட்காயின் நாணயமுறையை அடிப்படையாக கொண்டு இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் நீங்கள் பிட்காயினை விற்கவோ வாங்கவோ முடியும். இருந்த போதிலும் தற்போதுவரை பிட்காயின் நாணயமுறை என்பது முறையாகவும் பலத்தரப்பட்ட மக்களாலும் பயன்ப டுத்தப்படவில்லை. இந்தியாவில் மட்டும் மொத்தம் 500 கடைகள் பிட்காயினை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் பிட்காயின் அங்கீகரிக்கப் படவில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பிட்காயினை பற்றி ஆராய்வதற்கு குழு ஒன்றையும் சமீபத்தில் அமைத்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஒரு பிட்காயினின் தோராயமான மதிப்பு 1,200 அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ.77,362. 2030-ம் ஆண்டில் ஒரு பிட்காயினின் மதிப்பு 5,00,000 டாலர் வரை செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாக ஸ்நாப்சாட் முதலீட்டாளர் ஒருவர் கூறியிருக்கிறார். மேலும் தற்போதைக்கு நீங்கள் பிட்காயினை வாங்கினால் அதை பயன்படுத்துவது கடினம். ஆனால் அது முதலீடாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பிட்காயின் நாணயமுறை பணவிலக் கலை அடிப்படையாக கொண்டு இயங்கு வது. அதாவது பிட்காயின் பயன்படுத் துவது அதிகமானால் அதனுடைய தேவையும் அதிகமாகும். அதேபோல் அதன் மதிப்பும் அதிகமாகும் என்கின்றனர் வல்லுநர்கள்.

டிஜிட்டல் பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து டிஜிட்டல் கரன்சி என்ற முறையை நோக்கி சர்வதேசம் சென்றுக் கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் பிட்காயின் நம்மை ஆள நேர்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
நன்றி : தி இந்து (தமிழ்)

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection