தேவநேயப் பாவாணர் | Devaneya Pavanar

 தேவநேயபாவாணர்
வாழ்க்கைக் குறிப்பு:
ஊர்   :   திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர்
பெற்றோர்   :   ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார்
சிறப்புப் பெயர்:
செந்தமிழ்ச் செல்வர் (தமிழக அரசு)
செந்தமிழ் ஞாயிறு (பறம்புமலை பாரி விழாவினர்)
மொழி ஞாயிறு (தென்மொழி இதழ்)
தனித்தமிழ் ஊற்று;  இலக்கியப் பெட்டகம்;  இலக்கணச் செம்மல்;  தமிழ்மானங் காத்தவர்; தமிழ்ப்பெருங்காவலர் என 174 சிறப்புப் பெயர்களைப் பெற்றவர்.   

படைப்புகள்:
  • சொல்லாராய்ச்சிக் கட்டுரை
  • உயர்தரக் கட்டுரை இலக்கணம்
  • திருக்குறள் மரபுரை
  • தமிழர் மதம்
  • முதல் தாய்மொழி
  • தமிழ்நாட்டு விளையாட்டுகள்
  • தமிழர் திருமணம்
  • பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
  • வடமொழி வரலாறு
  • தமிழர் வரலாறு
  • மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் (இறுதி கட்டுரை)
  • மண்ணிலே விண்
  • இயற்றமிழ் இலக்கணம்  (முதல் நூல்)
  • கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம்
  • ஒப்பியல் மொழி நூல்
  • திராவிடத்தாய்

  • பழந்தமிழ் ஆட்சி
  • இசைத்தமிழ் கலம்பகம்
  • தமிழ் வரலாறு
  • தமிழ் கடன் கொடுத்து தழைக்குமா?
  • இன்னிசைக்கோவை
  • வேர்ச்சொல் கட்டுரைகள்
  • தமிழ் இலக்கிய வரலாறு
  • செந்தமிழ்க் காஞ்சி(பாடல் தொகுப்பு)
  • இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
    முதலான நாற்பத்துமூன்று நூல்களைப் படைத்துள்ளார்.
பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக 08.05.1974அன்று பணியமர்த்தப்பட்டு, அரசின் உதவியோடு சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுதிகள் சிலவற்றை வெளிக்கொணர்ந்தார்; இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் கால்டுவெல்.
தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர்.
தமிழைத் தழைக்கச் செய்த செம்மல் மறைமலையடிகள்.
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் தேவநேயப் பாவாணர்.


கருத்துரையிடுக

1 கருத்துகள்