வெளிநாடுவாழ் இந்தியர் நாள் | Pravasi Bharatiya Diwas

பிரவாசி பாரதீய சம்மான்

பிரவாசி பாரதீய சம்மான் (Pravasi Bharatiya Samman) என்பது வெளிநாடுவாழ் இந்தியருக்கான விருது. இது மகாத்மா காந்தி அடிகள் 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்த தினமான ஜனவரி ஒன்பதாம் நாளை நினைவுபடுத்தும் வகையில், வெளிநாட்டு இந்தியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

நோக்கம் :

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி தமக்குள்ளும் இந்திய மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் கலந்துரையாடவும் இடைத்தொடர்புகளை மேற்கொள்ளவும், இந்திய நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் எவை என்பதை எடுத்துக் காட்டவும் இவ்விழாக்கள் உதவும்.

வெளிநாடுவாழ் இந்தியர் நாள்

வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு பிரவாசி பாரதீய சம்மான் (Pravasi Bharatiya Samman) விருது வழங்கப்படுகின்றது.

 ஆண்டுதோறும் இந்நாள் கொண்டாடப்பட்ட இடங்கள்:

    2003 - புது தில்லி

    2004 - புது தில்லி

    2005 - மும்பை

    2006 - ஐதராபாத்

    2007 - புது தில்லி

    2008 - புது தில்லி

    2009 - சென்னை

    2010 - புது தில்லி

    2011 - புது தில்லி

    2012 - ஜெய்ப்பூர்

    2013 - கொச்சி

    2014 - புது தில்லி

    2015 - மகாத்மா மந்திர், காந்தி நகர், குஜராத்

 

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி விவேகானந்தர்

அலிகார்இயக்கம்‌ | சர்சையது அகமதுகான்

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்