மழைநீர் சேமிப்பு அமைப்புகள்

மழைநீர் சேமிப்பு அமைப்புகள் எவ்வாறு நிலத்தடி  நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன?

மேற் கூரைகளில் விழும் மழை நீரைச் சேமித்தல் :-

மழை நீரை மிகச் சிறப்பான முறையில் மேற் கூரைகளிலிருந்து சேமிக்கலாம்.

வீட்டின் மேற்கூரை, அடுக்கு மாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள், கோயில்கள் ஆகியவற்றில் பெய்யும் மழைநீரை, தொட்டிகளில் சேகரித்து, வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தலாம்.

கசிவு நீர்க் குழிகள் :-

இம்முறையில், மேற்கூரை மற்றும் திறந்த வெளிகளிலிருந்து பெறப்படும் மழைநீர் வடிகட்டும் தொட்டிகளுக்கு குழாய் மூலம் இணைக்கபட்டுள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்படும் நீர், கசிவு நீர் குழிகள் மூலம் மண்ணுக்குள் ஊடுருவி, நிலத்தடி நீராக சேகரிக்கப்படுகிறது.

ஏரிகள் அமைத்தல் :-

இது தமிழ் நாட்டிலுள்ள மிகப்பழமையான மழை நீர்சேகரிப்பு முறையாகும்.

ஒரு ஏரியில் மழை நீர் சேகரித்தப்பின், அதில் உள்ள உபரி நீர் அருகிலுள்ள மற்றொரு கிராமத்திலுள்ள ஏரியை சென்றடைந்து சேமிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

ஊரணிகள் :-

ஒவ்வொரு கிராமப் புறத்திலும் சிறிய அளவிலான மழை நீரைச் சேமிக்கும் விதமாக “ஊரணிகள்” அமைந்துள்ளன.

அவை கிராமங்களில் உள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில், குளிக்க, குடிக்க, துணி துவைக்க உதவுகின்றன.

இவை அருகிலுள்ள கிராமங்களுக்கும் பயன்படுகின்றன.

 19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி விவேகானந்தர்
அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்
இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்
இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்
TNPSC General Tamil Mock Test Free Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்