பொது அறிவு தகவல்கள் | சில முக்கிய உலக விருதுகள்

நோபல் பரிசு:
உலகின் மிக உயர்ந்த விருது. 1901 ஆம் ஆண்டு முதல் சமாதானம் உட்பட ஆறு துறைகளில் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் டிசம்பர் 10 ஆம் தேதி வழங்கப்படும்.

ரைட் லைவ்லி ஹுட் விருது:
மாற்று நோபல் பரிசாக போற்றப்படுகிறது. சுற்றுப்புறச் சூழல் ஆய்வுக்கும், பாதுகாப்புக்கும் பாடுபடும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுவது. பரிசு ஒரு இலட்சம் டாலர்.

காந்தி அமைதிப் பரிசு:
காந்திய வழியில் வன்முறை இன்றி போராடி வெற்றி பெறும் சமாதானக் காவலர்களுக்கு இந்திய அரசு வழங்கும் சர்வதேச அமைதி விருது. காந்திஜியின் 125 ஆவது பிறந்த நாளான 1995 இல் நிறுவப்பட்ட விருது. பரிசுத் தொகை ரூ. ஒரு கோடி.

இந்திரா காந்தி அமைதி மற்றும் வளர்ச்சி விருது:
இந்திய அரசு வழங்கும் சர்வதேச சமாதான விருது.
சர்வதேச புரிதிறனுக்கான ஜவஹர்லால் நேரு விருது:
இந்தியன் கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ் வழங்கும் விருது இது. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளையும் நல்ல விதத்தில் புரிந்து கொண்டு சமாதானப் பணியில் ஈடுபடும் மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. பரிசு ரூ. 15 இலட்சம்.

ஐ.நா. சுற்றுச்சூழல் விருது:
சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாடுபடும் மனிதர்களுக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு வழங்கும் விருது. பரிசு இரண்டு இலட்சம் டாலர்.

உல்ஃப் பரிசு (Wolf Prize):
இசைப் பணிக்கான சர்வதேச விருது

உலக உணவு விருது:
உலக மக்களுக்கு தரமான உணவு வகைகளைக் கண்டுபிடித்துத் தரும் மனிதர்களுக்கு பிலிப்பைன்ஸைச் சேர்ந்த சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் விருது. பரிசு இரண்டு இலட்சம் டாலர்.

காமன்வெல்த் பிராந்திய எழுத்தாளர் விருது:
காமன்வெல்த் பகுதிகளைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் விருது. பரிசு 1000 டாலர்.

ஒலிம்பிக் ஆர்டர் விருது:
ஒலிம்பிக் விளையாட்டு வளர்ச்சிக்கு தனிச் சிறப்புடன் பாடுபடுபவர்களுக்கு ஒலிம்பிக் கமிட்டி வழங்கும் விருது. இந்த விருதைப் பெற்ற ஒரே இந்தியர் முன்னாள் இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பா. சிவந்தி ஆதித்தன்.

புலிட்சர் விருது:
சர்வதேச அளவில் பத்திரிகைத்துறையில் சிறந்த ரிப்போர்ட், புகைப்படம் போன்றவற்றுக்கு வழங்கப்படும் அமெரிக்க விருது.

ஒலாப் பால்மே பரிசு:
பொது நலச் சேவையில் ஈடுபடும் மனிதர்களுக்கு வழங்கப்படும் விருது. பரிசு 16 ஆயிரம் டாலர்.

டெம்பிள்டன் பரிசு:
சமயம் மற்றும் ஆன்மீகம் மூலம் சர்வதேச ஒற்றுமைக்குப் பாடுபடுபவர்களுக்கு வழங்கப்படுவது. பரிசு 1.2 மில்லியன் டாலர்.

யூதாண்ட் விருது:
நாடுகளுக்கிடையே நேச உறவுகளை வளர்க்கும் சிறந்த மனிதர்களுக்கு வழங்கப்படும் விருது. ஐ.நா. பொதுச் செயலாளராக பணியாற்றிய யூதாண்ட் நினைவாக வழங்கப்படுகிறது.

ஜெஸ்ஸி ஒவன்ஸ் விருது:
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச விருது.
கலிங்கா விருது:
விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் தனிப்பட்ட சேவைக்கு யுனெஸ்கோ வழங்கும் விருது. பரிசு 1000 பவுண்ட்.

மக்சாஸே விருது:
ஆசியாவின் நோபல் என சிறப்பிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மக்சாஸேயின் நினைவாக வழங்கப்படுகிறது. சிறந்த குறிக்கோளுக்காக நேர்மையுடன் போராடிப் பாடுபடுபவர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பது இந்த விருதின் நோக்கமாகும். பரிசு 30,000 டாலர்.

மகாத்மா காந்தி உலக அமைதி விருது:
சமாதான வழியில் பாடுபடுபவர்களுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காந்தி பவுண்டேஷன் வழங்கும் விருது. பரிசு ஒரு இலட்சம் டாலர்.

புக்கர் பரிசு:
சிறந்த இலக்கியத்திற்காக, பிரிட்டன் வழங்கும் பரிசு. 1997 இல் அருந்ததிராய் எனும் இந்தியப் பெண் எழுத்தாளர் இவ்விருதைப் பெற்றார்.

புதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள் 
Akash IAS Academy Study Materials
TNPSC Science question and answer in tamil 
தமிழ் இலக்கிய கேள்வி பதில்கள்-25 
தமிழ்நாடு காவல்துறை காவலர் தேர்வு உளவியல் வினா விடைகள் 
Tamilnadu police exam - GK Questions and answers in tamil
பொது அறிவு கேள்வி பதில்கள்
GENERAL TAMIL QUESTION AND ANSWER
APTITUDE & MENTAL APILITY TEST
Tamil Ilakkiya Varalaru Vina Vidai
TNPSC, TRB, TET & POLICE EXAM GK ONLINE TEST
இந்திய அரசியல் அமைப்பு FREE ONLINE TEST 
List of competitive exams in india

கருத்துரையிடுக

0 கருத்துகள்