யசோதர காவியம்


  • ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று
  • வட மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பெற்ற நூல்.
  • இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
  • இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்
  • யசோதர காவியம் யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னின் வரலாற்றுக் கூறுகிறது.
  • ஐந்து சருக்கங்களை கொண்டது.
  • பாடல் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர்
  • விருத்தப்பாவால் ஆன நூல்

ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக 
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக 
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக 
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே.* 1405
சொல்லும் பொருளும்:
அறம் - நற்செயல்; வெகுளி- சினம்; ஞானம்- அறிவு; விரதம் - மேற்கொண்ட நன்னெறி

பாடலின்பொருள்:
நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும்: நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்கிட வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்கவேண்டும்: ஆராய வேண்டுமானால் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்; இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமானால் தாம் கொண்ட நன்னெறியினைக் காக்க வேண்டும்.

இலக்கணக் குறிப்பு
ஆக்குக, போக்குக, நோக்குக, - வியங்கோள் வினைமுற்றுகள்

பகுபத உறுப்பிலக்கணம்
போக்குக = போக்கு+க
போக்கு – பகுதி
க – வியங்கோள் வினைமுற்று விகுதி

சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம்தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம் - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து - முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் - இராஜராஜ சோழன் உலா - தொடர்பான செய்திகள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்