ad

பெரியாரின் சிந்தனைகள் | 9th New Tamil Book

2018ஆம் ஆண்டு பொதுப் பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட
புதிய 9-ஆம் வகுப்பு தமிழ் (இரண்டாம் பருவம்) பாடப்புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்ட குறிப்புகள்
வெண்தாடி வேந்தர், பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர், ஈரோட்டுச் சிங்கம் என்றெல்லாம் பலவாறு சிறப்பிக்கப்படுபவர் தந்தை பெரியார்.

மானமும் அறிவும் கொண்டவர்களாகத் தமிழர்கள் வாழவேண்டும் என்று அரும்பாடுபட்டவர்; தானே முயன்று கற்று, சுயமாகச் சிந்தித்து அறிவார்ந்த கருத்துகளை வெளியிட்டவர் தந்தை பெரியார்.

“சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச்சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” - தந்தை பெரியார்

சமூக வளர்ச்சிக்குக் கல்வியை மிகச் சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்.
“அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத் தரக்கூடாது. சுயசிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்” என்று பெரியார் கூறினார். 

பெரியார் எதிர்த்தவை:
இந்தித் திணிப்பு, குலக்கல்வித் திட்டம்,  தேவதாசி முறை, கள்ளுண்ணல், குழந்தைத் திருமணம், மணக்கொடை.

மனப்பாடத்திற்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும், மதிப்பெண்களுக்கு முதன்மை அளிக்கும் முறையையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார்.

எழுத்துச் சீர்திருத்தம்
மொழியின் பெருமையும் எழுத்துகளின் மேன்மையும் அவை எளிதில் கற்றுக் கொள்ளக்கூடியனவாக இருப்பதைப் பொறுத்தே அமைகின்றன. எனவே, காலவளர்ச்சிக்கேற்பத் தமிழ் எழுத்துகளைச்  சீரமைக்கத் தயங்கக் கூடாது என்று பெரியார் கருதினார்.

“மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்படவேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே கைக் கொள்ள வேண்டும்” என்றார் தந்தை பெரியார். அம்மாற்றத்திற்கான முயற்சியையும் பெரியார் மேற்கொண்டார்.

உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஒள’ என்பதனை ‘அவ்' எனவும் சீரமைத்தார். (ஐயா - அய்யா, ஒளவை - அவ்வை). அதுபோலவே, மெய்யெழுத்துகளில் சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்; அவ்வாறு குறைப்பதால் தமிழ்மொழி கற்பதற்கும் தட்டச்சு செய்வதற்கும் எளிதாகும் எனக் கருதினார்.

இச்சீரமைப்புக்கான மாற்று எழுத்துருக்களையும் (வரி வடிவம்) உருவாக்கினார். பெரியாரின் இக்கருத்தின் சில கூறுகளை 1978ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.

பெரியார் விதைத்த விதைகள்:
  • கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு,
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு,
  • பெண்களுக்கான சொத்துரிமை,
  • குடும்ப நலத்திட்டம்
  • கலப்புத் திருமணம்,
  • சீர்திருத்தத் திருமணச் சட்டம் ஏற்பு
Akash IAS Academy Study Materials
TNPSC Science question and answer in tamil 
தமிழ் இலக்கிய கேள்வி பதில்கள்-25 
தமிழ்நாடு காவல்துறை காவலர் தேர்வு உளவியல் வினா விடைகள் 
Tamilnadu police exam - GK Questions and answers in tamil
பொது அறிவு கேள்வி பதில்கள்
GENERAL TAMIL QUESTION AND ANSWER
APTITUDE & MENTAL APILITY TEST
Tamil Ilakkiya Varalaru Vina Vidai
TNPSC, TRB, TET & POLICE EXAM GK ONLINE TEST
இந்திய அரசியல் அமைப்பு FREE ONLINE TEST 
List of competitive exams in india


Post a Comment

0 Comments