பத்ம பூசண் விருது | Padma Bhushan

பத்ம பூசண் விருது இந்திய அரசால் குடிமக்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் மூன்றாவது மிகப் பெரிய விருதாகும்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் வேவை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் புகழ் பெற்ற சாதனைகள் / சேவைகள் புரிந்தோரை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதினை பெறுபவர்களுக்கு பணபலன் ஏதும் வழங்கப்படுவதில்லை. விதி எண் 18 (1)-ன்படி இவ்விருதினைப் பெற்றோர் தங்கள் பெயருக்கு முன்பும், பின்பும் இவ்விருதின் அடைமொழியை பயன்படுக்கூடாது.

இந்திய அரசால் வழங்கப்படும் பத்மவிபூசண், பத்ம பூசண், பத்ம ஸ்ரீ போன்ற விருதுகள் பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை முறைய இந்தியாவின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது உயரிய விருதுகளாகக் கருதப்படுகின்றன.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்களால் இவ்விருது ஜனவரி 2, 1954 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்விருதானது இனம், மதம், பாலினம், பதவி என வேறுபாடின்றி மிகச்சிறந்த தேசிய சேவை செய்த எல்லோரையும் பாராட்டி வழங்கப்படுகிறது.

மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தவிர அரசு ஊழியர்கள் உட்பட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர்கள் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்