மாணிக்கவாசகர்

  • மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர் 
  • மாணிக்கவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டு
  • மாணிக்கவாசகரின் பணி - அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சர்
  • பாண்டிய மன்னனுக்காகக் குதிரை வாங்கச் சென்றபோது இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்
  • மாணிக்கவாசகர் இறையருள் பெற்ற இடம் - திருப்பெருந்துறை
  • மாணிக்கவாசகர் கட்டிய கோயில் உள்ள இடம்- திருப்பெருந்துறை
  • திருப்பெருந்துறையின் இன்றைய பெயர் ஆவுடையார்கோயில்
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் திருப்பெருந்துறை உள்ளது 
  • அழுது அடியடைந்த அன்பர் எனப்படுபவர் - மாணிக்கவாசகர்
  • திருவாசகத்தை எழுதியவர் மாணிக்கவாசகர்
  • திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு போப்
  • மாணிக்கவாசகர் எழுதிய இன்னொரு நூல் திருக்கோவையார்
  • உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைப் போல் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை எனக்கூறியவர் ஜி.யு.போப்
  • மாணிக்கவாசகர் பாடல்கள் எட்டாம் திருமுறை ஆகும்
  • திருவாசகத்தில் உள்ள பாடல்கள் - 658 
  • சதகம் என்பது நூறு பாடல்கள் கொண்ட நூலாகும் 
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
    கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம்
      பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும் 
        கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே

        - இப்பாடல் திருவாசகத்தில் உள்ள திருச்சதகத்தின் முதல் பாடல்

        சொற்களும் பொருளும்:

        மெய் - உடல், விரை - மணம், ததும்பி - பெருகி கழல் - ஆண்கள் காலில் அணியும் அணிகலன் (கழல் என்பது இறைவனின் திருவடியைக் குறிக்கிறது) சயசய - வெல்க வெல்க அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சிதிரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

        கருத்துரையிடுக

        0 கருத்துகள்