அகநானூறு

TNPSC Group Exams, TET, PG TRB, TN Police Exams 
அகநானூறு Pdf Study Material

  • அகநூல்
  • 400 பாடல்கள்
  • ஆசிரியப்பாவால் ஆனது
  • பாடியவர்கள் 145 பேர்
  • தொகுத்தவர் உருத்திர சன்மனார்
  • தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
  • கடவுள் வாழ்த்துப்பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது
  • மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
  • 1-120 பாடல் களிற்றியானை நிறை (120 பாடல்கள்)
  • 121-300 பாடல் - மணிமிடைபவளம் ( 180 பாடல்கள்)
  • 301-400 பாடல் - நித்திலக் கோவை (100 பாடல்கள்)
  • சிற்றெல்லை 13 அடி பேரெல்லை 31 அடி
  • அகநானூறு நெடுந்தொகை என்றும் அழைக்கப்படுகிறது
  • ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப்பட்ட ஒரே தொகை நூல் அகநானூறு
  • அவ்ஒழுங்கு முறை வருமாறு
  • 1, 3, 5, 7.... ஒற்றைப்படை - பாலை - 200
  • 2, 8, 12, 18 .... இரண்டு, எட்டு - குறிஞ்சி - 80
  • 4, 14, 24 ..... நாலெல்லாம் - முல்லை - 40
  • 6, 16, 26 ...... ஆறெல்லாம் - மருதம் - 40
  • 10, 20, 30 ..... பத்தெல்லாம் - நெய்தல் - 40
  • நூல் முழுவதும் உரை எழுதியவர்கள் நா.மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை

  • செய்திகள்
    • குடவோலைத் தேர்தல் குறித்துக் கூறும் நூல் அகநானூறு
    • சங்க இலக்கியத்துள் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் கூறும் அகநூல் அகநானூறு.
    • வரலாற்றுச் செய்திகளை மிக  அதிகமாகக் கூறும் புலவர்கள் பரணர், மாமூலர்
    • சோழ நாட்டு வருவாய் குடந்தையில் வைத்துக் காக்கப்பட்டது
    • பண்டைத் தமிழர் திருமணம் குறித்துக் கூறும் நூல் (86, 136) அகநானூறு
    • திங்கள் ரோகிணியுடன் கூடிய நன்நாளில் திருமணம் நடந்தது
    மேற்கோள்

    “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
    சீர்மிகு பாட­க் குழீஇக் கங்கை
    நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ’’ - மாமூலர்


    “நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
    தங்கலர் வாழி தோழி’’ - மாமூலர்


    “யவனர் தந்த வினைமாண் நன்கலம்
    பொன்னாடு வந்து கறியொடு பெயரும்’’
    - எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்

    “தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
    மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்’’
    - குறுங்குடி மருதனார்

    “யாமே, பிரிவின்றி இயைந்த துவரா நட்பின்
    இருதலைப்புள்ளின் ஒருயிர் அம்மே’’ - கபிலர்

    “தமிழ்கெழு மூவர் காக்கும் நிலம்’’ - மாமூலர்

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்