- கபிலரை ஆதரித்தவர் பாரி
- ஒளவையாரை ஆதரித்தவன் அதியமான்
- பெருஞ்சித்திரனாரை ஆதரித்தவன் குமணன்
- மாங்குடி மருதனாரை ஆதரித்தவன் நெடுஞ்செழியன்
- பிசிராந்தையாரிடம் நட்புக் கொண்டவன் கோப்பெருஞ்சோழன்
- அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றவர் ஒளவையார்
- கோப்பெருஞ்சோழனுக்காக அவன் மகனிடம் தூது சென்றவர் புல்லாற்றூர் எயிற்றியனார்.
- நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே தூது சென்றவர் கோவூர்கிழார்.
- கண்ணகிக்காக (பேகன் மனைவி) பேகனைப் பாடியவர்கள் அரிசில் கிழார், கபிலர், பரணர், பெருங்குன்றூர்கிழார்
- இளங்குமணனின் மனத்தை மாற்றியவர் பெருந்தலைச் சாத்தனார்
- சேரனுக்கும் சோழனுக்கும் நடக்கவிருந்த போரைத் தடுத்தவர் முடமோசியார்
- கழாத்தலையார் என்ற புலவரைப் பாடியவர் கபிலர்
- கபிலரைப்பாடிய புலவர் நப்பசலையார்
- பொத்தியார் என்ற புலவரைப் பாடியவர் பிசிராந்தையார்
- மோசி என்ற புலவரைப் பற்றிப் பாடிய புலவர் பெருஞ்சித்திரனார்
பகுதி – (ஆ) இலக்கியம்
அறநூல்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
0 கருத்துகள்