கூறியவர் யார்? | TNPSC Question Answer


"நீவீழி காக்கும் கை காராளர் கை" என்று கூறியவர்  - கம்பர்

எள்ளல் இளமை அறியாமை மடமை  ஆகிய காரணங்களால்  நகைச்சுவை தோன்றுகிறது என்று கூறியவர் - தொல்காப்பியர்

"நகைச்சுவை இல்லாதவர்க்கு பகல் கூட இருளாக தோன்றும்" என்று கூறியவர்  - திருவள்ளுவர்

"எரிந்திலங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று" -  ஐயனாரிதனார்

எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று கூறியவர்  - வள்ளலார்

"தமிழ்மொழியே இறவாத நிலை தரும்" என்று கூறியவர்  - வள்ளலார்

"சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் " என்று கூறியவர்  - வள்ளலார்

"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்று கூறியவர்  - வள்ளலார்
நகைச்சுவை உணர்வு  மட்டும்  தனக்கு இல்லையென்றால்   தனது வாழ்க்கையை எப்பொழுதோ இழந்திருக்கக் கூடும்- காந்தியடிகள்

மருமக்கள் வழி மான்மியம் என்ற நகைச்சுவை களஞ்சிய நூலின் ஆசிரியர் யார்  - கவிமணி

பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்ற வானினும் நனி சிறந்தனவே யார் கூற்று  - பாரதியார்

"யாமறிந்த புலவரிலே கம்பனைபோல்" என்று கம்பரை புகழ்ந்தவர்  - பாரதியார்

தமிழின் தொன்மையைக் கருதி "என்றுமுள தென்தமிழ் " என்று கூறியவர்  -  கம்பர்

வீறுநடை  செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி! ! என்று கூறியவர்   - பாவலேறு பெருஞ்சித்திரனார்

திருந்திய பண்பும், சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம் என்றவர்  - பரிதிமாற் கலைஞர்

நமது செம்மொழி  பதினாறு செவ்வியல் தன்மைகளை  கொண்டது  என்று கூறியவர்  - தேவநேயப்பாவாணர்

சமுதாயம்  என்னும் மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்து விடாமல் தடுத்த நச்சுக்கொல்லி மருந்து யார்  - அம்பேத்கர்

'இதோ ஓர்  உத்தம மனிதர் போகிறார்" என்று  வள்ளலாரை கூறியவர்  - திகம்பர சுவாமிகள்

உலக வரலாற்றிலேயே  சிறந்த மேதை மாணிக்கவாசகர் என்று  யார் புகழாரம் சூட்டியுள்வர்  - ஜியுபோப்

கருத்துரையிடுக

0 கருத்துகள்