திருக்குறள் குறித்து புதிய தமிழ்ப்பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள
TNPSC, TET, PG TRB, TN POLICE EXAMS
போட்டித்தேர்வுகளுக்கான குறிப்புகள்
- திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்.
- வான்புகழ் வள்ளுவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு.
- திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. "திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது."அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்"
என்று திருக்குறளின் பெருமையை ஒளவையார்.
அறநூல்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
0 கருத்துகள்