திருக்குறள் | TNPSC Questions Answers

  • உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல், திருக்குறள். இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை இந்நூல். 
  • இது முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. 
  • தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது. இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். 
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 
  • இந்நூலைப் போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.
  • உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள். தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல்.
  • பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
  • இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, பொய்யில் புலவர், செந்நாப்போதார், பெருநாவலர் போன்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.
  • திரு + குறள் = திருக்குறள், சிறந்த குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலால் இப்பெயர் பெற்றது.  குறள் - இரண்டடி வெண்பா, திரு - சிறப்பு அடைமொழி. திருக்குறள் என்பது அடையடுத்த கருவி ஆகுபெயர் ஆகும்.
  • குறள், உலகப்பொது மறை; அறவிலக்கியம்; தமிழர் திருமறை; மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக் காட்டிய நூல். 
  • ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் முதலிய உலக மொழிகள் பலவற்றிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என்னும் பழமொழிகள் இந்நூலின் பெருமையை விளக்குகின்றன. இவற்றுள் 'நால்' என்பது நாலடியாரையும் 'இரண்டு' என்பது திருக்குறளையும் குறிக்கும்.

    Previous year Thirukkural Questions & Answers

1. அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது? (Gr-4, 2022)
(A) நெடுந்தொகை
(B) திருக்குறள்
(C) முத்தொள்ளாயிரம்
(D) கம்பராமாயணம்
(E) விடை தெரியவில்லை
See Answer:

2. "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர் (Gr-4, 2022)
(A) பாரதியார்
(B) சுரதா
(C) பாரதிதாசன்
(D) வாணிதாசன்
(E) விடை தெரியவில்லை
See Answer:

3. திருமணம் செல்வக்கேசவராயரால். 'தமிழுக்கு கதியாவார் இருவர்’ என்று குறிப்பிடப்படுபவர்கள் (Gr-4 2022)
(A) கம்பர், இளங்கோ
(B) கம்பர், திருவள்ளுவர்
(C) திருவள்ளுவர், இளங்கோ
(D) இளங்கோ, பாரதியார்
(E) விடை தெரியவில்லை
See Answer:

4. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு (Gr-4 2022)
(A) 1832
(B) 1812
(C) 1842
(D) 1852
(E) விடை தெரியவில்லை
See Answer:


கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. ஒவ்வொரு தேர்விலும் திருக்குறள் பற்றி நான்கு முதல் ஐந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே, இந்த குறிப்புகள் மிகவும் பயனுள்ளது. நன்றி!

    பதிலளிநீக்கு